ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சசிகலா ஒப்புதலோடு தினகரன் நீக்கி வருவதோடு, தனது ஆதரவாளர்களை அந்தப் பதவிக்கு நியமித்தும் வருகிறார். பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் இருந்த அமைப்புச் செயலாளர் பதவியைப் பறித்த தினகரன், அந்தப் பதவிக்கு நடிகர் செந்திலை நியமித்தார்.
இன்று சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை நடிகர் செந்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாதான் அனைத்துப் பிரச்னைகளையும் அவரே பார்த்துக்கொள்வார். முதலமைச்சர் பழனிசாமி, தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால் அவரை முதலமைச்சராக ஏற்று கொள்கிறோம் என கூறினார்.
நாஞ்சில் சம்பத் வீடு தாக்குதல், பா.ஜ.க, தி.மு.க தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், “என்னைப் பற்றி மட்டும் கேளுங்கள்” என்று நடிகர் செந்தில் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.