full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் ஷாம் திடீர் கைது

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனைஅநடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.

நடிகர் ஷாம், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும், தொடர்ந்து பல நாட்களாக இங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சூதாட்ட புகாரில் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ஷாம் தமிழில், இயற்கை, 12பி, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.