full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வறுமையில் இருக்கும் நந்தகோபாலுக்கு உதவிய நடிகர் சவுந்தரராஜா

நடிகர் சவுந்தரராஜா, நந்தகோபால், பிளாக் பாண்டி

நடிகர் சவுந்தரராஜா, நந்தகோபால், பிளாக் பாண்டி
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், ‘டேய்… சண்முகமணி’ என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர். தற்போது இவர் வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு நடிகர் சவுந்தரராஜா உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பெரும்பாலான திரைப்பட நடிகர்கள் இன்னும் போராட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் நாம் எல்லா உதவிகள் செய்ய இயலாது., அது இயல்புதான் இருந்தாலும் மெடிக்கல் உதவிகள் பெறமுடியாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அன்பையும், ஆதரவையும் கொடுப்போம்.
சகோ பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் அவரின் நிலைமை அறிந்து நேரில் சென்று என்னால் இயன்ற பணத்தையும், பழங்களும் கொடுக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அப்போது அவர் சொன்ன வார்த்தை சீக்கிரம் குணமடைந்து நான் சாதிக்க வேண்டும் என்று கூறினார். அன்பால் இயன்றதை கொடுப்போம். உதவி செய்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்வோம் வாழவைத்து வாழ்வோம்’ என்றார்.