அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள பாடல் ‘ஜெய் ஸ்ரீ ராம்‘
பக்தி மயமான இப்பாடல் ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விரைவில் வெளியீடு
அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.
பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. ஆடியோ வடிவில் முதலில் வெளியிடப்பட உள்ள ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல் விரைவில் வீடியோவாகவும் வெளியாக உள்ளது.
பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா திறம்பட செய்துள்ளார். பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, “500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்,” என்று கூறினார்.
மேலும் தகவல்களை பகிர்ந்த அவர், “ஸ்ரீ ராமரின் நாம மகிமை, அவரது பராக்கிரமம், ராமாயண சுருக்கம் மற்றும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலை நாமும் காணும் பாக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது,” என்றார்.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடலுக்கு பங்களித்த இசை வாத்திய கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததோடு ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாகாவும் கூறினார்.
***
*’Jai Shri Ram’, a song penned, composed and sung by actress Sukanya to celebrate the inaugural of Ram Temple in Ayodhya*
*Devotional song to be released soon in audio and video formats*
Famous actress and dancer Ms. Sukanya Ramesh has written, composed and sung a song titled ‘Jai Sri Ram’ in view of the inaugural of Ram Temple in Ayodhya on January 22.
This song soaked with spirituality can be easily sung by everyone from children to adults. ‘Jai Sri Ram’ will first be released in audio format, and the video version will follow soon.
Also, lyrics of the song are being translated into English. Musical arrangement and ensemble for this song is by C. Sathya who has done a splendid job. The devotional number is currently in its final stages of post-production.
Speaking about the song, actress Sukanya said, “The nation is in a festive mood as the Ram temple is all set to be opened in Ayodhya after 500 years. When the temple construction work started, a sketch of Lord Sri Rama drawn on my forehead by me got a lot of appreciation on social media. Now, with the temple getting ready for inaugural, I dedicate this song as my small contribution.”
Sharing more information, she said, “Lyrics of this song highlight the glory of Shri Rama Nama, the Lord’s unique qualities, gist of Ramayana and the privilege of seeing the temple built in Ayodhya.”
Sukanya thanked the music instrumentalists, publicist Nikil Murukan and his team for their contribution and wished all people would get the blessings of Lord Shri Rama Nama.