“மெர்சல்” தந்த அதிரிபுதிரியான வெற்றையைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் “சர்கார்”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கடைசியாக அமெரிக்கா சென்ற படக்குழு அங்கு லாஸ் வேகாஸ் நகரத்தில் பாடல் காட்சியை படமாக்கி விட்டு திரும்பி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் ஏகபோகமாக இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் “சர்கார்” படத்தின் கதை பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய், தனது வாக்கினை (ஓட்டு) செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். எதிர்பாராத விதமாக அவர் பயணம் செய்த விமானம் தாமதமாவதால், அவரது ஓட்டை திருட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சி ஆட்கள் போட்டு விடுகிறார்கள்.
அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அதிரிப்தி அடைந்த விஜய், அரசியலில் குதிக்கிறார். பின்னர் அரசியல்வாதிகளுடன் மோதி, எப்படி ஜெயிக்கிறார்? என்பதே மீதி கதை” என்கிறார்கள்.
ஏற்கனவே விஜய் படங்களில் அரசியல் வசனம் சூடு பறக்கும், அப்படி இருக்கும் போது இது முழுமையான அரசியல் படமென்று வேறு சொல்லிவிட்டார்கள்.. இனி கேட்கவா வேண்டும்? விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி செம்ம தீபாவளிதான்…