பயம் இல்லாத நல்ல வீரமுள்ள நடிகர் அவர் : ஏ.எல். அழகப்பன்

News

சீ ஷோர் கோல்டு புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. நாயகன் அஸ்வின், நாயகி ஸ்வாதி ரெட்டி, நடிகர் ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், தயாரிப்பாளர் ரகுநாதன், இசையமைப்பாளர் அஜீஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட அவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தட்டை வெளியிட தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், “இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கதை சொல்ல வந்தபோது என்னுடைய காஸ்ட்யூம் என்ன என்று கேட்டேன். இப்ப இருக்குற மாதிரியே வாங்க சார், அப்படி தான் உங்க கேரக்டரையே எழுதியிருக்கிறேன் என்றார்.

பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்து விட்டு தான் மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கமும் நல்ல பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த இருக்கிறது. விஷாலிடம் பயம் இல்லாத நல்ல வீரம் இருக்கிறது. எதிர் அணி என்றாலும் எல்லோரையும் அரவணைத்து செல்கிறார்” என்றார்.

“465 படங்களை பார்த்து விட்டு தான் படத்தை இயக்க வந்தேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.