நடிகை தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு

News

நடிகை தமன்னாவின் தாய், தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று இந்தியா முழுவதும் ஊரடங்கையும் மீறி வேகமாக பரவி வருகிறது. நடிகர் நடிகைகளும் கொரோனாவில் சிக்குகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் நடிகர் அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் ராஜமவுலி உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தமன்னாவின் தாய், தந்தைக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தமன்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எனது பெற்றோருக்கு கடந்த வாரம் இறுதியில் கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். அந்த முடிவுகள் தற்போது வந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களது நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறோம். எனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடவுள் கருணையால் பெற்றோர்கள் தேறி வருகிறார்கள். உங்கள் எல்லோருடையை பிரார்த்தனைகளும் அவர்களை குணமாக்கும்.“

இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.