full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல்.

எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஷ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இசை மற்றும் திரைப்பட வாழ்க்கையை சிரமமின்றி கையாண்டு வரும் ஸ்ருதி இது குறித்து கூறும்போது

“இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எட்ஜ் உங்களுக்கு இருக்கும் குழப்பத்தையும், சீரற்ற உங்கள் அன்பான பகுதிகளையும் வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சி. மற்றவர்களிடம் நீங்கள் சிறந்ததை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, உங்களை நீங்கள் உண்மையாக புரிந்துகொண்டு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான பயணம் தொடங்குகிறது.இவ்வாறு ஷ்ருதி கூறினார்.

கரண் பாரிக் இணைந்து தயாரித்துள்ள ‘எட்ஜ்’-ல் ஷ்ருதி பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ளார். பாடலை எழுதி பாடியது மட்டுமின்றி, இப்பாடலை பதிவு செய்து, இயக்குநரும் எடிட்டருமான சித்தி படேல் உடன் இணைந்து இப்பாடலுக்கான வீடியோவை ஊரடங்கு காலத்தில் படமாக்கியுள்ளார்.

இப்பாடல் இன்று விஎஹ்1 மற்றும் ஷ்ருதியின் யூடியூப் சேனலில் வெளியானது.