full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்த நாயகியின் பதில்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வர தொடர்ந்து முயற்சி செய்து வரும் சிங் நடிகை தொடக்கத்தில் நடித்த படங்கள் போதிய வரவேற்பை பெறாததால் தெலுங்கில் முழு கவனம் செலுத்தினார்.

தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவும் அங்கு வலம் வந்தார். சமீபத்தில் அந்த நாயகி நடித்த சிலந்தி படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் வரவேற்பு கிடைக்காததால், அந்த படத்திற்கு பிறகு நாயகிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது.

பின்னர் அவர் நடித்து தமிழில் வெளியான போலீஸ் படம் வெற்றி பெற்றதால், தற்போது தமிழில் காட்டு ராசா நாயகனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அந்த நாயகி ஒரு பத்திரிகையின் போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அப்போது, நீங்கள் டேட்டிங் செல்ல விரும்புபவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, 6 அடி உயரமாக இருக்க வேண்டும் என்று கூறிய நாயகி, அது போன்ற ஆண்மகனைத்தான் எனது கணவராக எதிர்பார்க்கிறேன் என்றும் ஒரு போடு போட்டார்.

சமீபத்தில் தான் பல்லால தேவனுடன் நாயகிக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், நாயகியின் இந்த பதில் கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்துள்ளது.