நடன இயக்குனரை திருமணம் செய்யவிருக்கும் சாந்தினி!

News
0
(0)

நடன இயக்குநர் நந்தாவை நாளை (டிசம்பர் 12) திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளார் நடிகை சாந்தினி.

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான ‘சித்து +2’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதைத் தொடர்ந்து ‘வில் அம்பு’, ‘என்னோடு விளையாடு’, ‘கவண்’, ‘வஞ்சகர் உலகம்’, ‘பில்லா பாண்டி’, ‘வண்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ‘வணங்காமுடி’, ‘டாலர் தேசம்’ உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் 9 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இருவருக்கும் நாளை (டிசம்பர் 12) திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் இருவரது வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர். அதைத் தொடர்ந்து டிசம்பர் 16-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைத் தொடர முடிவு செய்துள்ளார் சாந்தினி.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.