full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம்பெற்ற காஜல் அகர்வால் !

தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக   மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம்பெற்ற காஜல் அகர்வால் ! 


தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூர் மேடம் டுஸாட் மெழுகு சிலை மாளிகையில் இடம் பெறப்போவதாக அறிவிப்பு வெளியானபோது, அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது மெழுகு சிலை எந்தளவு தத் ரூபமாக இருக்கும்? அவரைப்போல் அச்சு அசலாக இருக்குமா? என பல கேள்விகள் சுற்றிவந்தன. இறுதியாக இன்று 5 பிப்ரவரி 2020 காலை சிங்கப்பூர் மேடம் டுஸாட்
மெழுகு சிலை மாளிகையில் காஜல் அகர்வாலின் சிலை திறக்கப்பட்டது. தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்தப் பெருமையை பெற்ற தன் வாழ்வின் பொன்னான தருணத்தை கொண்டாடி வருகிறார் காஜல் அகர்வால். தத்ரூபமாக  படைக்கப்பட்டிருக்கும் அவரது சிலையை கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகிறார்கள்.


இது குறித்து காஜல் அகர்வால கூறியதாவது…

என்னை நானே ஒரு கலைஞரின் விழியில் பார்க்கிறேன். எனக்கும் சிலைக்குமான ஒப்பீடு அபாரமானதாக உள்ளது. ஒரு சிறு பிசிறில்லாமல் அத்தனை நுண் விவரங்களுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணம் என் வாழ்வின் இன்றியமையாத பொன்னான தருணம். உலகின் மிக மிக பிரபலமான நபர்களின் சிலைகளுடன் எனது சிலையும் இடம்பெற்றிருப்பதில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்  உணர்கிறேன் என்றார்.