full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அந்த நடிகருக்காக நிபந்தனைகளை தளர்த்திய நடிகை

சமத்தான நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக படங்களில் ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படி நடிக்கும் படங்களிலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்று நிபந்தனை விதித்து வருகிறாராம்.

ஆனால், ஒரேயொரு நடிகருக்காக அந்த நடிகை தன்னுடைய நிபந்தனைகளையெல்லாம் தளர்த்தியிருக்கிறாராம். அந்த மூன்றெழுத்து நடிகருடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி போட்டுள்ள நடிகை தற்போது மூன்றாவதாகவும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்த படத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். சமத்தான நடிகை இதில் நடிக்க தயங்குவாரோ என்ற பயத்தில் இருந்த படக்குழுவுக்கு அந்த நடிகை ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ரெடி என பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அதுவும், இந்த நடிகருக்கு மட்டும்தான் அந்த சலுகை என அறிவிப்பு வேறு விட்டுள்ளாராம். இயக்குனர் எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் நடிக்கத் தயார் எனவும் சொல்லியுள்ளாராம்.