full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிக்பாஸ் ராசி.. நடிகைக்கு டும்.டும்..டும்..!

எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா. அவரது ஆறடி உயரமும், சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தது. அதோடு மட்டுமில்லாமால் நமீதா தன் ரசிகர்களை “மச்சான்ஸ்” என்று தான் கொஞ்சலோடு அழைப்பார். அந்த அழகிற்கே பல இளைஞர்கள் அடிமை இங்கு.

சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால்வரை பரபரப்பாக பேசப்பட்ட “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ராசியோ என்னவோ, கலந்துகொண்ட பலருக்கும் அடுத்தடுத்து பல்வேறு வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த பிக்பாஸ் தான் ராசி, நமீதாவிற்கு திருமணத்தைத் தந்திருக்கிறது போல.

ஆம், வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திருப்பதியில் நமீதாவிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

“அனைவருக்கும் வணக்கம். என்னைப் பற்றியும், வீராவைப் பற்றியும், எங்கள் திருமணத்தைப் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். எங்கள் திருமணம் வருகிற நவம்பர் 24 ஆம் ஆண்டு திருப்பதியில் நடைபெறவிருக்கிறது. வீரா எனது உயிர் நண்பர், அவர் ஒரு தயாரிப்பாளராகவும் வளரும் நடிகராகவும் இருக்கிறார். எங்களின் திருமணம் நிச்சயம் செய்த காதல் திருமணம். நானும் வீராவும் எங்களது நல்ல நண்பரான சசிதர் பாபுவினால் தான் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சந்தித்துக்கொண்டோம். நாளடைவில் அந்த நட்பு காதலானது. இப்போது திருமணத்திற்கும் தயாராகிவிட்டோம். இதுநாள்வரை என்மீது அன்பு செலுத்திய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அந்த ஆதரவையும், அன்பையும் இனிவரும் காலங்களிலும் நீங்கள் தரவேண்டும் என்பதையும் நான்கள் இருவரும் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வறு நமீதா தெரிவித்துள்ளார்.