full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கொரோனாவால் திருமண தேதியை முடிவு செய்யமுடியாத தவிப்பில்-நடிகை மியா ஜார்ஜ்

தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மியா ஜார்ஜுக்கும் கட்டுமான நிறுவனம் நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்தும் கொரோனாவால் திருமண தேதியை முடிவு செய்யமுடியாத தவிப்பில் குடும்பத்தினர் உள்ளனர்.

இதுபற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது: “எனது திருமண நிச்சயதார்த்தத்தை குடும்பத்தினர் முடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிந்ததும் திருமணத்தை நடத்த திட்டமிட்டோம். ஆனால் அது தீவிரமடைந்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று புரியவில்லை. நண்பர்கள், உறவினர்களை அழைத்து திருமணத்தை விமரிசையாக நடத்தலாமா? எளிமையாக நடத்தலாமா? அல்லது கொரோனா பரவல் முடிந்த பிறகு திருமணத்தை நடத்தலாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறோம். என் வருங்கால கணவருடன் போனில் அடிக்கடி பேசி வருகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.