தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த டீச்சர் நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்களாம் அவருடன் நடித்த ஹீரோக்கள். நடிகை அறிமுகமான படத்தை பார்த்த பல நடிகர்கள் அவரை கமிட் பண்ண எவ்வளவோ முயற்சித்தார்களாம். படிப்புதான் முக்கியம் என்று போனவர் இப்போதுதான் வந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி இருக்கிறாராம்.
நடிகை நடிப்பைத் தவிர வேறு எந்த கெமிஸ்ட்ரிக்கும் இடம் கொடுக்க மாட்றாராம். இதனால் தான் நடிகர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறதாம். இதனால் பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போடும் வாய்ப்பு மிஸ் ஆகும் என்று பலரும் கூறுகிறார்களாம். ஆனால் நடிகை பரவாயில்லை என்கிறாராம்.