எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரை பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் தேவையான விஷயம். அத்தகைய அனைத்து குணாதிசயங்களுடன், பாலக் லால்வானி ஏற்கனவே அனைவரது கவனத்தையும், குறிப்பாக குப்பத்து ராஜா ட்ரைலர் மூலம் ஈர்த்திருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” என்றார் பாலக் லால்வானி.
படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது, “நான் முன்பே குறிப்பிட்டது போல சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். டிரைலர் மற்றும் பிற காட்சி விளம்பரங்களில் பார்க்கும்போது, படம் சீரியஸான விஷயங்களை பேசுவது போல உள்ளது, உங்கள் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என கேட்டால், “பாபா பாஸ்கர் சார் என்னிடம் ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே, கதையில் கமெர்சியல் அம்சங்கள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது குறித்து மிகவும் உற்சாகமடைந்தேன். நீங்கள் குறிப்பிட்டு என் கதாபாத்திரத்தை சொன்னால், அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.
ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் KL படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா திரைப்படம்.