full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகை ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘குத்து’ படம் மூலம் பிரபலமான ரம்யா சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அரசியலில் நுழைந்து காங்கிரஸ் எம்.பி. ஆனார். அதன்பின், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அவர் சாப்பிட்ட உணவு, விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரை சந்திக்க அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனையின் முன்பு குவிதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *