full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நடிகையின் மகன் கைது!

ரிஷி, கந்தா கடம்பா கதிர்வேலா, பாய்ஸ், தலைநகரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. அடிக்கடி வழக்குகளில் சிக்கும் இவர் மீது கடந்த மாதத்தில் இலங்கைப் பெண் ஒருவரை அடைத்து வைத்து பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த வழக்கில் தான் புவனேஸ்வரி தற்போது நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன், மருத்துவக் கல்லூரி மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் வசித்து வரும் அந்த மாணவியிடம் மிதுன் சீனிவாசன் முகநூல்மூலமாக பழகி பின்னர் காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த காரணத்தினால் நேற்று அந்த மாணவியின் வீட்டிற்கே சென்று மிதுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவியின் மீது ஊற்றி மிரட்டி விட்டு, வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராக்களையும் அடித்து உடைத்திருக்கிறார்.

இந்தசம்பவத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து திருமங்கலம் காவல் ஆய்வாளர் ரவி நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.