“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன் !

News
0
(0)

 

 

சின்னத்திரை மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் வழியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். அவரின் பங்களிப்பு “ஓ மை கடவுளே” படத்தின்  பெரும் பலமாக மாறியிருக்கிறது. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனர்.

 

படம் குறித்து நடிகை வாணி போஜன் கூறியதாவது….

“ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான  படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தெர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக,  எனக்கு மிகப்பரும் ஆசிர்வாதமாக  “ஓ மை கடவுளே” படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும் ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். மேலும் இப்படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள் எனை இப்படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது. இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள்,

 

 

காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வுன் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்தாக அமையும். அசோக் செல்வனின் மிகச்சிறந்த,  அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும்  குடியிருக்க செய்யும். இப்படத்தில் சாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு இதுவரையிலான அவரது அடையாளத்தையே மாற்றிவிடும் என்றார்.

 

குறும்படங்கள் மூலம் கவனம் வென்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியுள்ளார்.
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

 

அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.
வாணி போஜன், M S பாஸ்கர், சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து இசை – லியான் ஜேம்ஸ் ஒளிப்பதிவு – விது அயன்னா
படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ் கலை இயக்கம் – இராமலிங்கம் உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன் உடைகள் – முகம்மது சுபையர்
சண்டைப் பயிற்சி – ராம்குமார் பாடல்கள் – கோ சேஷா புகைப்படம் – ராஜா தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்
நிர்வாக தயாரிப்பு – நோவா.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.