full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறிய நடிகைகள்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். பலரும் சமூக வலைத்தளத்தில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். புகைப்படங்களை பதிவிட்டு வரும் சிலர் கொஞ்சம் எல்லை மீறி ஆபாசப் படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய சேலஞ்ச் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. ‘பெண்களுக்கு ஆதரவாக பெண்கள்’ அதாவது, “Women supporting women” என்ற சேலஞ்சை ஆரம்பித்து வைத்தார்கள். அந்த சேலஞ்சில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பிரபலங்கள் பதிவிட வேண்டும். இந்த சேலஞ்ச் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பல சினிமா நடிகைகள் விதவிதமான கருப்பு வெள்ளை புகைப்படங்களைப் பதிவிட்டு சமூக வலைத்தளங்கள் முழுவதும் கருப்பு வெள்ளையாகவே மாற்றிவிட்டார்கள். பாலிவுட், கோலிவுட் என அனைத்து முன்னணி நடிகைகளும் அந்த சேலஞ்சில் கலந்து கொண்டு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.