full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

பேரல்லல் யூனிவர்ஸ் என்ற இரண்டாம் உலகக் கதையைக் கொண்ட இந்தப் படமும் சேர்ந்து விடும் அடியே

டைம் டிராவல், டைம் லூப், பேரல்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனைகளை எல்லாம் ஹாலிவுட் திரையுலகம், அற்புதமான படைப்புகளாக மாற்றித் தந்திருக்கிறது. ஆனால் இவற்றை தமிழ் சினிமாவுக்கு சாத்தியமா என்று நாம் நினைக்கும் நேரத்தில் இது சாத்தியமே என்று நிரூபித்த படம் தான் அடியே.

பேரல்லல் யூனிவர்ஸ் என்ற இரண்டாம் உலகக் கதையைக் கொண்ட இந்தப் படமும் சேர்ந்து விடும் என்று நம்பலாம்.

வாழ்வில் அடுத்தடுத்த இடிகள் தாக்க, தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நாயகன் ஜிவி பிரகாஷுக்கு டிவியில் ஒலித்த ஒரு குரல் புதிய நம்பிக்கையைத் தர அதன் மூலம் தன் பழைய காதலியை மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவளுக்கு இவரைத் தெரியாது என்கிற நிலையில் தன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடிக்கிறார்.

அதற்கான வேளைக்குக் காத்திருக்கும் நேரத்தில் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கமடைகிறார். கண் விழிக்கும் போது இன்னொரு உலகத்தில் இருக்கிறார். இதே சென்னைதான் – ஆனால் அது மெட்ராஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கே இதுவரை பார்த்திராத விந்தைகள் எல்லாம் நடக்க, நமக்கு தெரிந்த எல்லோருமே வேறு பெயரில் அல்லது உருவில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நல்ல விஷயம் யாரை ஜிவி பிரகாஷ் காதலித்தாரோ இந்த உலகத்தில் அவரே அவருக்கு மனைவியாக இருக்கிறார். ஆனால் இது உண்மையா பொய்யா என்று மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாகும் நேரத்தில் திடீரென்று மீண்டும் பழைய உலகுக்குள் பிரவேசிக்க, அங்கே தன் காதலி, நண்பனின் காதலியாக இருக்க… இந்த இரு வேறு உலகக் கதைகள் என்ன ஆகின்றன என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

ஒரு இடியாப்ப சிக்கலான கதையை சிறப்பான திரைக்கதை மூலம் நம்மை கவர்ந்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு பாராட்டுகள்.நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்கும் பட்டியலில் இணைகிறார் .

ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் மிக சிறந்த கதாபாத்திரம் என்றால் அது இது தான் அற்புதமான நடிப்பில் ரசிகர்களை மிகவும் கவருகிறார்.இதுவரை இல்லாத ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது அருமை பெருமை.மாணவனாக மாறும் போது மணவனாகவே மாறியிருக்கிறார்.

முதல் உலகத்தில் பெற்றோரைப் பறி கொடுத்த அவர் இரண்டாம் உலகத்தில் அவர்களைச் சந்திக்கும்போது “நீங்க இன்னும் சாகலையா.?” என்று கேட்கும்போது தியேட்டர் அதிர்கிறது.

நாயகி கௌரி கிஷனுக்குதான் நேரில் பார்த்தால் சாதாரணப் பெண்ணாகத் தோன்றும் அவரைக், கேமரா வழியாகத் திரையில் பார்க்கும்போது பேரழகியாகத் தெரிவது வியப்புக்குரியது.அதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு சின்ன சின்ன அசைவுகளில் அவர் காட்டும் முக பாவங்களை ரசித்துக்கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தில் கௌரி கிஷனை ஜீவி மட்டுமல்ல படம் பார்க்கும் எல்லோருமே காதலிக்க முடியும்.

அடியே படம் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை நகர்வது தெரியாத அளவுக்கு திரைக்கதை அத்தனை பரபரப்பாக இருக்கிறது.

ஜீவியின் நண்பர்களில் வழக்கம்போல ஆர் ஜே விஜய் கலாய்ப்பதில் தியேட்டரை கலகலக்க வைக்கிறார். முதல் உலகத்தில் வாசிம் அக்ரமாகவும், இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸ் ஆகவும் அவர் வருவது செம லந்து.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு கிளாஸ். ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், இசையில் அமைந்த பாடல்களும் அற்புதம்.

மொத்தத்தில் அடியே அனைவரும் பார்க்கும் நம்மவ