விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிமன்றம் சரமாரி கேள்வி
தளபதி விஜய்யின் சொகுசு கார் வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தனுஷின் சொகுசு கார் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷன் வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெறுவதாகவும் வரும் திங்கட்கிழமைக்குள் நுழைவு வரியை கட்ட தயார் என்றும் எனவே மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறினார்
மனுவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது என கூறிய நீதிபதி, தனுஷ் தனது மனுவில் ஏன் தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தார் என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பால்காரர் கூட பெட்ரோலுக்கான ஜிஎஸ்டி வரியை கட்டும்போது, உங்களால் முடியவில்லையா? ஜிஎஸ்டி செலுத்த முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.தளபதி விஜய் வழக்கை விசாரித்த எம். ஸ்.சுப்ரமணியம் இந்த வழக்கையும் விசாரித்தது குறிப்பிடத்தக்கது .