சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் “டாடி” ஜான் விஜய், அஞ்சலி நாயர்,சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.ஒரு பயணத்தின் போது புதிய நட்புகள் கிடைக்கிறார்கள். அந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றுகிறார்கள் அந்த புதிய நட்புகள்.நம்மோடு நன்றாக பழகியவர்கள், எதிர் பாராத ஒரு நிமிடத்தில் நம் வாழ்வையே கலைத்துப்போட்டால்…
ஆமாம்… போதை அப்படித்தான். எப்படிப்பட்ட நட்பையும் போதை முறித்துவிடும், எப்படிப்பட்ட உறவையும் போதை அழித்துவிடும். போதையின் மற்றவர்களை அழிப்பதோடு தன்னையும் அழித்துக்கொள்ளவே வழிவகுக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக பேச வருகிறது, அகடு.பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.
அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு,சஞ்சீவ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.