மீண்டும் இணைகிறது பழைய வண்ணாரப்பேட்டை

News

பிரஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. இதில் பிரஜனுக்கு ஜோடியாக அஸ்மிதா நடித்திருந்தார். மேலும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மோகன் இயக்கியிருந்த இப்படத்தை ஜுபின் இசையமைத்திருந்தார். ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரித்த இப்படத்தை அனாமிகா பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ஜுபின் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படமும் ரசிகர்களிடம் பேசும்படியாக அமைந்தது.

தற்போது அனாமிகா பிச்சர்ஸ் நிறுவனம் ஹன்சிகா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படக்குழுவினர் இணைய இருக்கின்றனர்.

பிரஜன் கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ஜுபின் இசையமைக்க இருக்கிறார். மேலும் நிஷாந்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை குமரன் என்பவர் இயக்க இருக்கிறார்.

தற்போது குமரன் ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட அனாமிகா பிச்சர்ஸ் நிறுவனர், ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படக்குழுவினர் மீண்டும் இணைவதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.