தமிழக அரசின் விருது மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது – ஐஸ்வர்யா ராஜேஷ்

News
0
(0)

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 2014ம் ஆண்டின் சிறந்த நடிகையாக ‘காக்கா முட்டை’ படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விருது அறிவிக்கப்பட்டுள்ள சந்தோஷத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வீடியோ ஒன்றையும் அனுப்பிள்ளார்.

அறிக்கையில், ‘என் சினிமா வாழ்க்கையில் ‘காக்கா முட்டை’ மறக்க முடியாத படம். நடிக்கும் போதே படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. கதாநாயகியாக நடிக்கும் பலரும் நடிக்கத் தயங்கும் வேடம் அது. நான் துணிச்சலாக ஏற்று நடித்தேன். அதற்குரிய பரிசாக ஊடங்கங்கள் பாராட்டின. படமும் வெற்றி பெற்றது. இப்போது தமிழக அரசின் விருதும் எனக்கு கிடைத்துள்ளது.

இந்நேரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு நன்றி. ரசிகர்களுக்கும் நன்றி. விருதின் மூலம் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ள தமிழக அரசுக்கும் நன்றி’ என்று கூறப்பட்டுள்ளது.

வீடியோ…. https://www.youtube.com/watch?v=7z1rZ3hMRkk

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.