full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:-
 
“என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன். தமிழில் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் ஆக தயாராகி உள்ளது.
 
சமீபகாலமாக இளம் கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரோடு நடிக்கிறேன் என்பதை விட என்னமாதிரி கதாபாத்திரங்கள் தேர்வு செய்கிறேன் என்பது தான் முக்கியம். நல்ல கதை, கதாபாத்திரம் இருந்தால் எந்த நடிகர்களுடன் வேண்டுமானாலும் நடிப்பேன்.
 
 
சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்.
 
நல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.