அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக இது தயாராகி வருகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வலிமை பட வில்லன் கார்த்திகேயாவிற்கு அஜித் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறியிருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கார்த்திகேயா பதிவிட்டுள்ளதாவது: மிகுந்த அன்புடன் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகுது என கூறி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.