full screen background image
Search
Wednesday 4 December 2024
  • :
  • :
Latest Update

அல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது.

இதற்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘சரைநடு’ படம்தான் 5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டது. தற்போது இதை அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் முந்தியுள்ளது. தற்போது வரை ‘விவேகம்’ படத்தை 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.