அஜித் – சிவா கூட்டணி “விஸ்வாசம்” படத்துடன் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.
“வீரம்” படத்தில் ஆரம்பமான இந்த கூட்டணி “வேதாளம்”, “விவேகம்” என தொடர்ந்து தற்போது “விஸ்வாசம்” வரை நீடிக்கிறது. ஆனால் நிஜமாக சொல்ல வேண்டும் என்றால், அஜித் ரசிகர்களுக்கே இந்த கூட்டணி நீடிப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. “விவேகம்” படம் வெளியான சமயத்தில் பல அஜித் ரசிகர்களே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன் கூட்டணி அமைக்க உள்ளராம். மேலும் இந்த படத்தை “ஸ்டூடியோ க்ரீன்” நிறுவனம் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.