விஸ்வாசத்திற்காக தோற்றத்தை மாற்றும் அஜித்

News

விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படத்திற்கு `விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம்.

கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் தொடங்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. அதேபோல் விஜய் 62 படமும், சூர்யா – செல்வராகவன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.