full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்

அஜித் நடிப்பில் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.