full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் அக்‌ஷராஹாசன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்‌ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

விவேகம் படத்தில் நடித்தது குறித்து அவர் பேசிய போது, “இயக்குனர் சிவா என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த விதம் என்னை உடனடியாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தைச் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அஜித் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனைப் பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.

பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் படக்குழுவினர் மிகக் கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப் போகின்றனர். ‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.