full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குநராகும் ‘கலாபக் காதலன்’ அக்சயா

ஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’, கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, போன்ற படங்களில் நாயகியாக நடித்த அக்சயா, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

‘யாளி’ என்ற புதிய திரைப்படத்தில் இவரே ஹீரோயினாக நடித்து படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் இவரது கணவர் டி.பாலச்சந்தரே தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் தமன்  கதாநாயகனாக நடித்திருக்கிறார். மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன்  என்ற புதுமுகமும் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – V.K.ராமராஜு, இசை – S.R.ராம், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கவிதாவாணி V.லக்ஷ்மி, படத் தொகுப்பு – அஹமது, சந்துரு, மக்கள் தொடர்பு -மணவை புவன். இணை இயக்கம் – உன்னி பிரணவம், இணை தயாரிப்பு  -கவிதாவாணி V.லக்ஷ்மி, தயாரிப்பு – பாலச்சந்தர்.T, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அக்சயா.B                        

Thaman - Akshaya (2)

தனது அறிமுகப் படம் பற்றி இயக்குநரும், நாயகியுமான அக்சயா பேசும்போது, “பெண் இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது நானும் இணைந்துள்ளேன். 

 ‘யாளி’ என்பது அனைத்துக் கோவில்களிலும் நீங்கள் பார்த்திருக்கும் ஒரு புராதன  சிற்பத்தின் பெயர்தான். சிங்க முகத்தையும், யானையின் உடலையும் கொண்ட அந்த மறைந்துபோன விலங்கினத்தின் பெயரான ‘யாளி’யை இந்தப் படத்தின் கதைக்காக தேர்வு செய்திருக்கிறோம்.

இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படம். மும்பையின் பின்னணியில் நடக்கும் கதை இது. முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றித்தான் படத்தின் திரைக்கதை நகரும்.

நாயகி ஜனனியும்(அக்சயா), நாயகனும்(தமன்) காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு கொஞ்சமும் தொடர்பேயில்லாத பாலா (அர்ஜுன்) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின் தொடர்கிறார்.

அவர் யார்? அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார்? அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு  நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

விறுவிறுப்பான திரைக்கதையில் படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியாக இருக்கும். இதன் படப்பிடிப்பு மும்பை, மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது. வரும் ஜூன் மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம்  திரைக்கு வர உள்ளது” என்றார் இயக்குநர் அக்சயா.