full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அழகம் பெருமாளின் பர்னபாஸ் அனுபவம்

`தரமணி’ திரைப்படத்தில் பர்னபாஸ் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் அழகம்பெருமாள் நடித்துள்ளார். இது அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் நடித்தது பற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு `தரமணி’ திரைப்படத்தில் நான் நடித்துள்ள பர்னபாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பர்னபாஸ் வாக்கு, பைபிள் வாக்கு லே’ என்ற வசனம் இப்போது பிரபலம்.

ராம் என்னிடம் கதை சொல்லும் போது இந்த காட்சிகள் இவ்வளவு ஸ்டிராங்காக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இப்போது மாற்று சினிமாவுக்கான காலம் வந்தாச்சு. எவ்வளவு நாள் தான் ஒரே படத்தைப் போட்டு பார்த்து பார்த்து ஒரு பார்மலாவுக்குள்ளேயே சிக்கிக் கொண்டிருப்பது? இயக்குனர் ராம் அதை உடைத்திருக்கிறார்.

இந்த படத்தில் கன்னியாகுமரி தமிழ் எனக்கு ஒரு பிளஸ். சில ஆடியன்ஸ் பேஸ்புக்கில் பர்னபாஸ் கேரக்டரை பொறுத்தவரை நீங்க கலக்கிட்டீங்கனு சொல்லி இருந்தாங்க. பெருமையாக இருந்தது.

முன்னாடி நிறைய படங்களில் நடித்தேன். மக்களிடம் அது சரியாக போய் சேரவில்லை. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இயக்குனர் ராமுக்கு நன்றி. இப்போது ஏழு படங்களில் புதியதலைமுறை இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். எந்த பாத்திரத்தில் நடித்தாலும், அதைச் சரியாக செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.

மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.” என்றார்.