full screen background image
Search
Thursday 12 December 2024
  • :
  • :
Latest Update

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பில் உருவான அலங்கு திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

 

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் அவ்வப்போது வெற்றிபெறுவது வழக்கம் ,
இவ்வருடமும் அதைப்போல் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன . அந்த வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணையும்
என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது .

இன்று படத்தின் ட்ரைலரை வெளியீட்டிற்கு முன்பு பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் மற்றும்
படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தை பற்றிய சுவாரசிய தகவல்களை கேட்டறிந்த அவர் உடனடியாக
படத்ததை பார்த்துவிடுவதாக படக்குழுவிடம் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி
இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

அலங்கு திரைப்படத்தை பல வெற்றிப்படங்களை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி திரு.B.சக்திவேலன் அவர்கள் உலகம் முழுவதும்
வருகின்ற டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுகிறார்

YouTube Link : https://youtu.be/KgiHHOsuYb4