full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘அலேகா’ மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி 

 

சிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் (  நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் ‘அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில் பெருமைதான் . 
இது, காமத்தை வியாபாரமாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை இது காதலின் உயர்வை சொல்லும் படம் காதலின் தெரிவே காமத்தின் தொடக்கம்

காதல் இல்லா காமமும் இல்லை..
காமம் இல்லா காதலும் இல்லை.

ஆனால்.. காமத்தில் வரும் காதல் காலம்தாண்டி வாழ்வது இல்லை. காதலில் வரும் காமம்தான்  காலம்தாண்டி வாழும். 

இது எங்கள் கதை அல்ல உங்கள் காதல் கதை.. என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கமளித்துள்ளார்.

‘மாலை பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’ என்று படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஆரி, இப்படத்தில் முழுக்க முழுக்க காதலனாக நடித்திருக்கிறார்.அதேபோல், சமூக அக்கறையுடன் எடுக்கப்படும் இப்பபடத்தில் நடிப்பதில் பெருமைகொள்கிறேன் என்றார் ,ஆரி. 

முன் காலத்தில் காதலுக்கு எதிரியாக ஜாதி, மதம் மற்றும் அந்தஸ்து இருந்தது. ஆனால், இப்போது காதலுக்கு காதலே எதிரியாக இருக்கிறது. எங்கள் காதல் அல்ல; உங்கள் காதல் கதை. இந்த வரிகள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். இப்படத்தின் முதல் வீடியோ ‘டிக்டாக்’-ல் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது.

மேலும் இது ஜாலியான காதல் படமாக இல்லாமல், காதலை ஆழமாக உணர்த்தும் நிஜமான காதலை கூறும் படமாக இருக்கும். இப்படம் இக்காலகட்டத்திற்கு மட்டுமல்ல, அனைவரையும் தொடர்படுத்தும் படமாகவும், பிரதிபலிக்கும் படமாகவும் இருக்கும்.

சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் ஆரி, ‘அலேகா’ படம் மூலம் ‘ஆரோக்யம் குறைந்தால் உடல் கெட்டுவிடும்; காதல் குறைந்தால் வாழ்க்கை கெட்டுவிடும்’ என்று காதலுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். ‘அய்யனார்’ புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை – சத்யா, ஒளிப்பதிவு – தில் ராஜ், படத்தொகுப்பு – கார்த்திக் ராம், பாடல்கள் – யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன்.