full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினி, கமலிடம் வேண்டுகோள் வைத்த அல்போன்ஸ் புத்திரன்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

மேலும், “சினிமாவையும் சூதாட்டத்தோடு ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா? தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றி அவருடன் பேச வேண்டும். நீங்கள் அவருடன் பேசினால் நிச்சயம் உங்கள் பேச்சுவார்த்தை திரை உலகத்தையும் ரசிகர்களையும் நிச்சயம் காப்பாற்றும்.” என்று தெரிவித்துள்ளார்.