பிரபல நடிகை அமலாபால் ஒன்றரை கோடிக்கு வாங்கிய காரை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் உத்தரவிட்டிருந்தார்.
போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்திருந்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அந்நிலையில் அமலாபாலின் கார் சட்டப்படி தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை என்றும் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை அமைதி காத்து வந்த அமலாபால், தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில நேரங்களில், நான் நகர வாழ்க்கையில் இருந்தும், தேவையற்ற ஊகங்களில் இருந்தும் விலகி ஓட நினைப்பதுண்டு. இப்போது படகு சவாரியை நான் தேர்வு செய்திருக்கிறேன். சட்டத்தை உடைப்பதற்கான எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.