பட்டியலில் இடம் பிடித்தாரா அமலாபால்?

News

அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் ரூ.100 கோடிகளை வசூலித்து 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.100 கோடிகளை வசூலித்த படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை அமலாபாலும் இடம் பிடித்துள்ளார்.

தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கும் ‘திருட்டு பயலே’, ‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கும் ‘மின்மினி’ தயாரிப்பாளர் முருகன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி ஜோடியாக நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்து 3 மலையாள படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகின்றன.

தற்போது பிசியாக நடிப்பது குறித்து கூறிய அமலாபால்…“ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும் கதாபாத்திரம் வித்தியாசமாக உள்ளது. நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகுந்த உற்சாகம் தருகிறது.” என்றார்.