தனுஷை விட்டு விலகிய அமலாபால்

News

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமலாபால். இந்த ஜோடி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. இவர்கள் இருவரும் மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடித்தார்கள்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தனுஷும் ‘ப.பாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் செயல்பட ஆரம்பித்தார். இதனால் ‘வடசென்னை’ படம் டிராப் ஆனதா? என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்தன. மேலும் இதற்கான காரணமும் என்னவென்பது தெரியாமல் இருந்துவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து அமலாபால் விலகி இருக்கிறார். கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் முதலில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமானார். சமந்தாவிற்கு திருமணம் நிச்சயம் ஆனதால் படத்தில் இருந்து விலகினார். தற்போது அமலாபால் ஒப்பந்தமாகி விலகியிருக்கிறார். இதையடுத்து ‘வடசென்னை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க போவது யார்? என்று கேள்விகுறியாக இருக்கிறது.