full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் திருமணம் : அமலாபால்

‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலாபால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து நடித்த படங்கள் அமலாபாலுக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார்.

‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.

அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘திருட்டுப் பயலே-2’ மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து சமீபத்தில் கூறிய அமலாபால், ‘எதிர்பாராத விதமாக எல்லாம் நடந்து விட்டது. நான் விஜய்யை இப்போதும் விரும்புகிறேன்.’ என்று தெரிவித்தார்.

இப்போது அமலாபால் அளித்துள்ள பேட்டியில், “திருமணம் என்பது முழுவதுமாக வெறுத்து ஒதுக்கும் வி‌ஷயம் அல்ல. என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும். என்றாலும் அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. இப்போது என் கவனம் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.