full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியீட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘அமரன்’ படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், ‘அமரன்’ திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்ல உள்ளடக்கம் உள்ள திரைப்படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்பதற்கு ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார்.

***