full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி மூலம் கலக்க இருக்கும் அனிருத்

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி மூலம் கலக்க இருக்கும் அனிருத்

அமெரிக்க மற்றும் கனடா நாட்டில் அனிருத்யின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி

இந்திய சினிமாவில் இன்று மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் என்றால் அது ராக் ஸ்டார் அனிருத் என்பது அனைவருக்கும் நாம் அறிந்த விஷயம். இவரின் இசையில் வரும் பாடலுக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இவரது இசையில் வந்த பாடல் அனைத்தும் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக இவரின் இசைக்கு இன்றைய இளைஞர்கள் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இது இவரின் இசை கச்சேரிக்கும் உண்டு

உலகில் பல்வேரு நாட்டில் இவரின் இசை கச்சேரிக்கு நடந்து உள்ளது குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய்,லண்டன் போன்ற நகரங்களில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது அதன்படி தற்போது இவர் இசைக்கச்சேரி அமெரிக்க நகரில் நான்கு மாகாணத்தில் நடக்கிறது அதோடு கனடா நாட்டிலும் ஒரு இசை கச்சேரி நடக்க இருக்கிறது

அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஹுக்கும் இசைநிகழ்ச்சிக்கு வந்த அனிருத் அவர்களை அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் மச்சா ஸ்வாக் எழில்வாணன் இவி, வரவேற்றார், இவர்களுடன் மச்சான் ஸ்வாக் டான்ஸ் ஸ்டூடியோவும் ரேணுகா வரவேற்றனர் . இது முதன்முறையாக விமான நிலையத்தில் நடனம் ஆடியபடி அனிருத் அவர்களை வரவேற்றனர் இதற்க்கு முன்பு இதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை!!

அனிருத் இசை நிகழ்ச்சியை ஷோர் மீடியா குழுவும், ஷ்ரீ பாலாஜி என்டர்டெயின்மென்ட்-ம் வழங்குகிறது.