full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமிதாப் – ரிஷி கூட்டணி


பாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 நாட் அவுட்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

சுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் – ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது தந்தையாக அமிதாப் பச்சனும், 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத்தியில் `102 நாட் அவுட்’ என்ற பெயரில் வெளியான படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது.

26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் உடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று இப்படத்தில் மகனாக நடிக்கும் ரிஷி கபூர் அவரதுடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.