full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சினிமாவை விட்டே வெளியேறுகிறாரா ஏமி ஜாக்சன்!!


கடந்த 2010-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த “மதராசப்பட்டினம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஏமி ஜாக்சன். இங்கிலாந்தில் பிறந்த இவர், “மதராசப்பட்டினம்” தந்த வரவேற்பினால், தமில் திரையுலகில் கதாநாயகியாக நிரந்தர இடம் பெற்றர்.

நடிகர் விக்ரம் ஜோடியாக “ஐ” மற்றும் “தாண்டவம்” ஆகிய இரு படங்களிலும், நடிகர் விஜய் ஜோடியாக “தெரி” படத்திலும், நடிகர் உதனிதி ஜோடியாக “கெத்து” படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் “2.0” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் திடீரென, “I’m moving to Morocco and never coming back. Bye” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே அவர் சினிமாவை விட்டு விலகிச் செல்கிறாரா? அல்லது விளையாட்டிற்காக செய்யப்பட்ட பதிவா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.