full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆண்ட்ரியாவின் அதிரடி பேச்சு!!

நிகழ்கால தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை யாரென்று கேட்டால் அண்ட்ரியாவின் பெயரை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். அந்தளவிற்கு தனது நடிப்பில் ஆவர்த்தனம் செய்யக்கூடியவர் அவர். வழக்கமான கதாநாயகி வேடங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், அழுத்தமான முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களாஇ மட்டுமே தேர்வு செய்து நடிக்கக் கூடியவர்.

கடைசியாக இவர் நடித்த “தரமணி” படத்தில் இவர் ஏற்று நடித்த “ஆல்தியா” கதாபாத்திரம் ஆண்ட்ரியாவின் திறமைக்கு ஒரு சான்றாய் அமைந்தது. பல தரப்பினரும் அவரது நடிப்பை புகழ்ந்து தள்ளினர். அவசரப்பட்டு படங்களைத் தேர்வு செய்யாமல், வெற்றிமாறனின் இயக்கத்தில் “வடசென்னை” படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,

“சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ‘தரமணி’ படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு படவாய்ப்பு எதுவும் வரவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் நான் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு போதும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது. திரைப்படத்தில் நிர்வாணமாகக் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்”, என்று டஅதிரடியாக பேசினார்.