போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா..!!

News

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2.

இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.On Behalf of “Bhavani Entertainment” Kamal Bora presents his Production No.2 with “Andrea Jeremiah”..!!

This Film has Andrea Jeremiah to play the lead role, followed by J.K Ashtosh Rana, K.S Ravikumar, Manobala, “Aadukalam” fame Naren are doing the supporting role in the film.

The Film being Produced by Rajesh Kumar, “DIL” Sathya is directing the film. He directed a film in Kannada called “DIL” which turned out to be a blockbuster there and later he had also given lot more films a hit as a director..!! He has also produced “Raj Bahadur” movie and lot more films in Kannada. Surprisingly, after hitting the blockbusters on screen as director and a producer “DIL” Sathya has also been a choreographer for more than 150 films in Kannada Films.

Following up with this Film Andrea Jeremiah plays the role of a “Cop”. It is an Action Thriller and Fantasy mixed combination of story which is gearing up for the making. In the Presence of the cast and crew the Film’s Shooting starts today with a small Puja Ceremony in Chennai.

Once the Film starts in Chennai, the film Unit has planned the next schedule of its shooting in Cochin, Baroda(Gujarat), Jaipur and some other places..!!