full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆண்ட்ரியா – பிரசன்னா கூட்டணி திருப்புமுனையாக அமையுமா?

சரியான வாய்ப்புகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், கிடைக்கிற வாய்ப்புகளில் அழுத்தமாக முத்திரை பதிக்கும் நடிகர் நடிகைகளில் மிக முகியமானோர் நடிகர் பிரசன்னாவும், நடிகை ஆண்ட்ரியாவும்..

பிரசன்னா நடிப்பில் கடைசியாக “திருட்டுப் பயலே-2” படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதே போல ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “தரமணி” படமும் அவருக்கு பலமாக அமைந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் வைத்து ஒரு ஒடம் உருவாக இருக்கிறது. அனைவரது பாராட்டுக்களையும் குவித்த “விடியும் முன்” படத்தை இயக்கிய பாலாஜி குமார் இப்படத்தை இயக்குகிறார். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அளவுக்கு சஸ்பென்ஸாக இருக்கும் வகையிலான திரில்லராக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. யோகி பாபுவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் நிச்சயமாக ஆண்ட்ரியா – பிரசன்னா கூட்டணிக்கு திருப்புமுனையாக அமையுமா என பார்ப்போம்!!