
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என வாழ்த்து மழை பொழகின்றனர்.
பிரபல சினிமா இசைப்பாளர் அனிருத் ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை மியூசிக் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக ‘SUPER STAR RAJINI’ வந்தபோது தியேட்டர் ரசிகர்களின் கைத்தட்டலாம் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் யார் இசை அமைத்தாலும் இந்த பின்னணி மியூசிக் உடன் ரஜினி பெயர் திரையில் தோன்றும்.

ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் மரணம்… மாசு மரணம்… என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.
https://www.instagram.com/p/CCUwR4Chhmg/
இன்று எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது இசையின் மூலம் சிறப்பான வகையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். ரஜினியின் டைட்டில் பெயர் வருவதுபோல் எம்எஸ் டோனி பெயர் வருவது போல் உருவாக்கி, அதன்பின் மரணம்… மாசு மரணம்… என வரிகளுக்கு எம்எஸ் டோனி அறிமுகம் ஆவது போன்று அனிருத் வீடியோ வெளியிட்டுயிருக்கிறார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது