full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `பலூன்’. இறுதிகட்டத்ததை எட்டியுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை, நேற்று முன்தினம் பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.

சினிஷ் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் `பலூன்’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பலூன் படப்பிடிப்பு தளத்தில், ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் விதமாக, `பலூன்’ படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார். ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வரவைத்தார் இயக்குநர் சினிஷ். படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.